×

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குவிந்த பொதுமக்கள்

நெல்லை, ஜூன் 18: இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அகில பாரத இந்து மகா சபா மாநில அமைப்பு தலைவர் ரத்தினகுமார், தென் மண்டல பசு பாதுகாப்பு பிரிவு தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமையில் நெல்லை டவுன், பாளை, தென்காசி, சுத்தமல்லி, பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு, ‘‘இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். ஏழை, எளிய மக்களான எங்களுக்கு இதுநாள் வரை வீட்டுமனை பட்டா கிடைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விரைந்து எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டை திருத்து அம்பேத்கர் நகர் மக்கள் அளித்த மனுவில் ‘‘ஊரின் வடக்கே குடிநீர் கிணறு அருகே பாதாள சாக்கடை மொத்த கழிவுநீர் கிணறும் தோண்டப்பட்டு வருகிறது. எனவே கழிவுநீர் அங்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என மனு அளிக்கப்பட்டது. நெல்லை மாநகராட்சி 1வது வார்டு பால்கட்டளை கிராம மக்கள் தங்களுக்கு அப்பகுதியிலே ரேஷன் கடை அமைத்திட கேட்டு மனு அளித்தனர். அங்கு வசிக்கும் 300 குடும்பங்களும் 4 கி.மீ தூரம் உள்ள கணபதி மில் காலனிக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டியதால் அலைச்சல் ஏற்படுவதாக அவர்கள் மனுவில் தெரிவித்தனர்.

Tags : housewife ,office ,Nellie Collector ,
× RELATED சார்பதிவாளர் அலுவலகத்தில் சர்வர் பழுதால் மக்கள் அவதி