களக்காட்டில் ஜூன் 22ல் அய்யாவழி மாநாடு

களக்காடு,ஜூன் 18:  களக்காடு வட்டார அய்யாவழி மக்கள் சார்பில் களக்காடு தேரடி திடலில் வரும் 22ம் தேதி அய்யாவழி 7வது மாநாடு நடக்கிறது. இதையொட்டி மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அதனைதொடர்ந்து 2 மணிக்கு அகில திரட்டு ஏடு வாசிப்பு நடக்கிறது. இதனை மாநாட்டு குழு தலைவர் சிவப்பிரசாமி தொடங்கி வைக்கிறார். மாலை 3 மணிக்கு அய்யாவின் வாகன பவனி இடம்பெறுகிறது. வாகன பவனிக்கு கரையிருப்பு நாராயணன் தலைமை வகிக்கிறார். கூடங்குளம் ராமகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். ஸ்ரீகுருசிவசந்திரர் தொடங்கி வைக்கிறார். இதில் சிறுவர், சிறுமிகளின் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடியவாறு கலந்து கொள்கின்றனர். பதி பண்டாரங்கள் காண்டம் பாடுகின்றனர். அதன்பின் மாலை 5.30 மணிக்கு மாநாடு தொடங்குகிறது.  தூத்துக்குடி முன்னாள் எம்பி ஜெயத்துரை தலைமை வகிக்கிறார். பால்சாமி வரவேற்கிறார்.

முன்னாள் எம்.பி.ராமசுப்பு, பேசுகிறார். சுவாமிதோப்பு பூஜிதகுரு சுவாமி ஆசியுரை வழங்குகிறார். பேராசிரியை ஸ்ரீமதி அகிலத்திரட்டு குறித்து விளக்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் சொக்கலிங்கம், வள்ளியூர் தெய்வேந்திரன், களக்காடு நயினார், திசையன்விளை லைசாள் எட்வர்டு உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு சாமிதோப்பு ஸ்ரீகுருசிவசந்திரரின் அய்யா வழி அருளிசை வழிபாடு நடைபெறுகிறது.
இதனை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர் தொடங்கி வைக்கிறார். ஏற்பாடுகளை மாநாட்டு குழு தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Ayanavani Conference ,
× RELATED சேர்ந்தமரம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு