மாணவி மாயம்

நெல்லை, ஜூன் 18: சங்கரன்கோவில் அருகேயுள்ள திருமலாபுரத்தை சேர்ந்த துரைபாண்டி மகன் சவுந்தர்யா (15). இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 20ம் தேதி திருமலாபுரம் பேச்சியம்மன் கோயில் வடக்கு தெருவிலுள்ள தனது  மாமா செந்தூர்பாண்டியன் வீட்டிலிருந்து பனவடலிசத்திரத்துக்கு டியூஷன் படிக்க சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனையடுத்து அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி மாயமான பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED மானூரில் பிளஸ்2 மாணவி மாயம்