நிகேதன் பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ. மெயின்ஸ் தேர்வில் சாதனை

திருவள்ளூர், ஜூன்18:  திருவள்ளூர் நிகேதன் பள்ளியை சேர்ந்த 14 மாணவர்கள் ஜே.இ.இ. மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று என்.ஐ.டி. யில் சேரும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். மாணவன் க.கிஷோர்,  ஜே.இ.இ. அடவான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் அகில இந்திய ஓ.பி.சி. தரவரிசையில் 2295 இடம்பெற்று ஐ.ஐ.டி.யில் சேரும் அரிய வாய்ப்பினை பெற்றுள்ளார். மேலும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் 42 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 4 மாணவர்கள் தமிழகத்தின் முதன்மை மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். திருவள்ளூர் நகரில் ஐ.ஐ.டி. மற்றும் நீட் போன்ற மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளில் சாதனை படைத்து வரும் ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவர்களையும், இதற்கு காரணமான ஆசிரியர்களையும் பள்ளி தலைவர் எ. பன்னீர்செல்வம்,  தாளாளர் ப.விஷ்ணுசரன், இயக்குனர் பரணிதரன், துணை முதல்வர் கவிதா கந்தசாமி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.   

× RELATED கத்தரிப்பூ வண்ண பட்டு உடுத்திய அத்தி வரதர்