வங்கனூர் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளிக்கு உதவி

பள்ளிப்பட்டு, ஜூன் 18: ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனூர் ஊராட்சியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு இலவச மடிக் கணினி வழங்கும் நிகழ்ச்சி பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் எஸ்.வி.நரசிம்மன் தலைமையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் பண்மொழி பாவை வரவேற்றார். பள்ளியின் முன்னாள் மாணவர் என்.வி.நீலகண்டன், ₹35 ஆயிரம் மதிப்புள்ள இலவச மடிக் கணினியை வழங்கினார். இதில் பள்ளியின் எஸ்எம்சி தலைவர் சந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பள்ளிக்கு தேவையான மின்விசிறிகளை வழங்கவும் முன்னாள் மாணவர் நீலகண்டன் உறுதி கூறினார்.

Tags : Government School ,Bankanur ,
× RELATED நலத்திட்ட உதவி வழங்கல்