×

கல்லூரி திறக்கப்பட்ட முதல் நாளே தடையை மீறி ‘பஸ் டே’ கொண்டாட்டம்

* 20 மாணவர்களை பிடித்து தீவிர விசாரணை
* தொடரும் சம்பவங்களால் பயணிகள் அச்சம்

சென்னை, ஜூன் 18: கல்லூரி திறக்கப்பட்ட முதல்நாளே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தடையை மீறி ‘பஸ் டே’ கொண்டாடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 20 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று கலைக கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு சென்றனர். சென்னையில் மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி, புதுக்கல்லூரி மாணவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் சக நண்பர்களுடன் கல்லூரிகளுக்கு ெசன்றனர். மாணவர்களிடையே ரூட் பிரச்னை இருப்பதால் வன்முறை சம்பவம் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்ட்ரல், அண்ணாசதுக்கம், கீழ்ப்பாக்கம், ராயப்ேபட்டை, நந்தனம் பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும், ஆண்டின் முதல் நாள் என்பதால் சீனியர் மாணவர்களுக்கும், ஜூனியர் மாணவர்களுக்கும் இடையே எந்தவித தகராறும் ஏற்படாமல் தடுக்கவும், ஈவ் டீசிங், ராகிங் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் பச்சையப்பன், மாநில கல்லூரி, நந்தனம், புதுக்கல்லூரிகள் முன்பு அந்தந்த பகுதியில் உள்ள காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், போலீசாரின் தடையை மீறி பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று அமைந்தகரை மார்க்கெட் புல்லா அவென்யூ அருகே வந்த மாநகர பேருந்தை வழிமறித்து ஏறினர். பின்னர், படிக்கெட்டு மற்றும் மேற்கூரையில் ஏறி பேருந்து ஜன்னல் கதவுகளில் தாளம் போட்டு, கானா பாடல்களை பாடி, ஆட்டம் பாட்டத்துடன் ‘பஸ் டே’ கொண்டாடினர். இதனால், பயணிகள் அச்சமடைந்தனர்.மேலும், பஸ் டிரைவரை மிரட்டி மெதுவாக செல்லும் படி கூறி, பேருந்தின் முன்பும் ஜன்னல் கம்பிகளை பிடித்தும் அபாயகரமான வகையில் தொங்கிக் கொண்டு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை பார்த்து கூச்சலிட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்படி கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது போலீசார் வருவதை பார்த்த மாணவர்கள் பேருந்தில் இருந்து சிதறி ஓடினர். அவர்களில் முன்னாள் மாணவர்களான மதுரவாயல் எம்எம்டிஏ காலனியை சேர்ந்த ரஞ்சித் (21), கோயம்பேடு பஜனை கோயில் தெருவை சேர்ந்த சிவக்குமார் (21), நெற்குன்றம் மந்தவெளி தெருவை சேர்ந்த அரிஹரன் (22), நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்த லோகேஷ் (20), ஆவடி கவுரிபேட்டை ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்த ஜெயபிரதாப் (21), சென்னை அருகே உள்ள கொத்தபாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ் (20) மற்றும் தற்போது பச்சையப்பன் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களான அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ கல்கி நகரை சேர்ந்த பி.ஏ இரண்டாம் ஆண்டு மாணவன் மகேஷ் (19), மதுரவாயல் அபிராமி நகரை சேர்ந்த பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் விக்னேஷ் (20), சென்னீர்குப்பம் செல்வகணபதி நகரை ேசர்ந்த பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ராகேஷ் (19), மதுரவாயல் எம்.எம்.டி.ஏ.காலனியை ேசர்ந்த பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் மணிகண்டன் (19), பூந்தமல்லி குத்தம்பாக்கத்தை சேர்ந்த பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வரும் சந்தோஷ் (19), மதுரவாயல் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வரும் மணிகண்டன் (20), பூந்தமல்லி அம்பேத்கர் தெருவை சேர்ந்த பி.ஏ.மூன்றாம் ஆண்டு படித்து வரும் நரேந்திரன் (19), மதுரவாயல் கங்கையம்மன் நகர் 8வது ெதருவை சேர்ந்த பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வரும் பிரகாஷ் (20), குமரன் நகரை சேர்ந்த பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் பரணிதரன் (18) ஆகிய 16 பேரை போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.அதேபோல், அயனாவரம் நியூ ஆவடி சாலையில் ஆர்டிஓ அலுவலகம் பேருந்து நிறுத்தத்தில் நேற்று 30க்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கையில் ‘பச்சையப்பன் கல்லூரி 47 ஏ ரூட் தான் வாலு’ என்ற தலைப்பில் பேனர்களுடன் நின்று இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 47 ஏ ரூட் மாநகர பேருந்தை வழிமறித்து பயணிகள் யாரையும் பேருந்தில் ஏற விடாமல் விரட்டிவிட்டு பேருந்து முன்பு பேனர் கட்டி மாலை அணிவித்தனர். பிறகு மாணவர்கள் பேருந்து முன்பும், மேற்கூரை மீதும் படிக்கட்டில் தொங்கியபடிம் ‘பச்சையப்பன் கல்லூரி தான் மாசு’ என்று கத்தியபடி டிரைவரை பேருந்தை இயக்கும்படி கூறி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது பேருந்து மீது தொங்கி கொண்டு வந்த மாணவர்கள் போலீசாரை பார்த்ததும் இறங்கி ஓடினர். அப்ேபாது, போலீசார் சாலையில் துரத்தி சென்று 4 மாணவர்களை மட்டும் பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.  அதில், அயனாவரம் பழனியாண்டவர் கோயில் தெருவை ேசர்ந்த பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவன் சரத்குமார் (23) என்றும், இவருடன் பச்சையப்பன் கல்லூரியில் தற்போது பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வரும் சுரேஷ்குமார் (20), அம்பத்தூர் ஐசிஎப் காலனியை சேர்ந்த பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வரும் குணசேகரன் (20) மற்றும் புதுப்பாக்கம் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் வில்லிவாக்கத்தை சேர்ந்த துரைராஜ் (21) என தெரியவந்தது. மேலும், தப்பி ஓடிய சக மாணவர்களை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பிடிபட்ட முன்னாள் மற்றும் தற்போதைய மாணவர்கள் என 20 பேரிடம் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவுப்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்டவர்களில் முன்னாள் மாணவர்கள் 7 பேர் மீது போலீசார் தடையை மீறி பஸ் டே கொண்டாடியது, பொதுமக்களுக்கு இடையூறு செய்தது, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள மாணவர்களான 13 மாணவர்களின் பெற்றோரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பஸ் டே கொண்டாடும் மாணவர்கள் மீது சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் மூலம் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் போலீசாரின் எச்சரிக்கையும் மீறி சென்னையில் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடி வருவது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எச்சரிக்கை நோட்டீஸ்
காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு நேற்று துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அதில், மாணவர்கள் தங்களது எதிர்காலம் வளமாக அமைய வேண்டி படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தவும்.மாணவர்கள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டால் வருங்காலத்தில் உயர் கல்வி பயிலுதல், அரசு மற்றும் தனியார் பணிகளுக்குச் ெசல்ல இயலாத நிலை ஏற்படும். எனவே அவ்வாறான செயல்களைத் தவிர்க்கவும். கல்லூரிக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு கல்லூரி முதல்வரிடமோ அல்லது காவல் துறையிடமோ முறையிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய காவல் துறையின் சார்பாக மீண்டும் வாழ்த்துக்கள், என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

போலீசாரிடம் வாக்குவாதம்
பச்சையப்பன் கல்லூரி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகப்படும் வகையில் கல்லூரிக்குள் செல்ல முயன்ற 2 வாலிபர்களை மடக்கி அடையாள அட்டையை காண்பிக்கும் படி கேட்டனர். இதனால் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சந்தேகமடைந்த போலீசார் 2 வாலிபர்களையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 2013-16ம் ஆண்டு பி.காம் படித்த பட்டாபிராம் வள்ளலார் நகரை சேர்ந்த அஜேஸ் (23) என்றும் அவரது நண்பர் பட்டாபிராம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த ஞானதீபன் (24) என்றும் தெரியவந்தது. இதையடுத்து அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக போலீசார் 2 வாலிபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags : celebration ,college opening ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்