செங்கல்பட்டு - தாம்பரம் வழித்தடத்தில் சிக்னல் கோளாறால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

செங்கல்பட்டு, ஜூன் 18: செங்கல்பட்டு - தாம்பரம் வழிதடத்தில் திடீர் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ரயில் பாதையில் நேற்று காலை திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, சிங்கப்பெருமாள் கோயில் அருகே நேற்று காலை 10.30 மணிமுதல் 11 மணிவரை மின்சார ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.அதேபோல், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மின்சார ரயில்கள்,  செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனால் ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தகவலறிந்து செங்கல்பட்டு ரயில் நிலையபொறியாளர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிக்னலில் ஏற்பட்ட கோளாறை சீரமைத்தனர். அதன்பின்னர், சுமார் ஒருமணி நேரம் கழித்து  ரயில் போக்குவரத்து சீரானது. இதையொட்டி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

Tags : signal disruption ,passengers ,Chengalpattu - Railway ,route ,Tambaram ,
× RELATED ஃபேஸ்புக் வழியே சமூக சேவை...ஆச்சரியப்படுத்தும் மத்யமர் குழு...