×

அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு வசந்த மண்டபம் சீரமைக்கும் பணி மும்முரம்

காஞ்சிபுரம், ஜூன் 18: காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் உற்சவம் நடக்க உள்ளதால், பொதுமக்கள் தரிசனம் செய்யும் வசந்த மண்டபத்தை சீரமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதர் வைபவம் வரும் ஜூலை 1ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடக்கிறது. அனந்த சரஸ் குளத்தில் இருந்து எழுந்தருளும் அத்தி வரதர் நின்ற கோலத்தில் 24 நாள்கள், சயன கோலத்தில் 24 நாள்கள் பக்தர்களுக்கு  காட்சியளிப்பார்.இதனை முன்னிட்டு கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவத்துக்காக குளத்தில் இருக்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.இந்த வைபவத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் என தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுறது. எனவே, பக்தர்களின் வசதிக்காக  ₹12.89 கோடியில் விழா ஏற்பாடுகள், தீவிரமாக நடக்கின்றன.

அதில் ஒரு பகுதியாக அத்தி வரதர், பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும் வசந்த மண்டபம், மேற்கு ராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன், வலது புறத்தில் உள்ளது. இதையொட்டி, வசந்த மண்டபம் சீரமைப்பு பணி மும்முரமாக நடக்கிறது. வசந்த மண்டபத்தின் தரைப்பகுதிக்கு வெண்மை நிற கருங்கற்கள் பதித்தல், வெள்ளையடிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

Tags : Hall ,Vasantha Mahaamuram ,
× RELATED தேர்தல் பணி போலீசார் தபால் ஓட்டு போட்டனர்