×

குடியாத்தம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி தஞ்சம்

குடியாத்தம், ஜூன் 18: குடியாத்தம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி தஞ்சமடைந்ததால் இருவீட்டாரிமும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். குடியாத்தம் அடுத்த நெட்ஏரி கிராமத்தை சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகள் ரம்யா(21) இவர் வேலூர் தனியார் பல்கலைக்கழகத்தில் எம்சிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் குடியாத்தம் அடுத்த வேப்பூர் கிராமம், அம்பேத்கர் தெருவை சேர்ந்த குமார் மகன் அசோக்குமார்(26) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இதையறிந்த இருவீட்டு பெற்றோர்கள் மாற்று சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ரம்யா மற்றும் அசோக்குமார் கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து, ரம்யாவின் தந்தை விஜயராகவன் கடந்த 13ம் தேதி தனது மகள் காணாமல் போனதாக குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிந்து விசாரித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை ரம்யா, அசோக்குமார் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, போலீசார் இருவீட்டாரையும் அழைத்து இருவரும் மேஜர் என்பதால் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Tags : police station ,Gudiyatham ,
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்