×

திருப்பத்தூரில் ஹெல்மெட் அணியாத 800 பேர் மீது வழக்கு போலீசார் அதிரடி

திருப்பத்தூர், ஜூன் 18: திருப்பத்தூரில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி வந்த 800க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர். திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனலோகன் தலைமையிலான போலீசார் புதுப்பேட்டை ரோடு சாலையில் நேற்று காலை திடீரென தடுப்பு வேலிகள் அமைத்து, அவ்வழியாக வந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட பைக்குகளை மடக்கி பிடித்து, ஹெல்மெட் அணியாமல் வந்த சுமார் 800க்கும் மேற்பட்ட பைக் ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் இந்த திடீர் வாகன தணிக்கையால், திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

Tags : persons ,Tirupathur ,
× RELATED சென்னையில் குடிசை வாரிய குடியிருப்பு...