திருவண்ணாமலை அருகே மது குடிக்க பணம் கேட்டு வாலிபரை தாக்கிய சகோதரர்கள் கைது

திருவண்ணாமலை, ஜூன் 18: திருவண்ணாமலை அருகே மதுகுடிக்க பணம் கேட்டு வாலிபரை தாக்கிய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை அடுத்த துர்க்கைநம்மியந்தல் பள்ளத்தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(21). இவர் கடந்த 15ம் தேதி திருவண்ணாமலை-அவலூர்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது, அவரிடம் வடஆண்டாபட்டு கிராமத்தை சேர்ந்த கார்த்தி(20), அவரது அண்ணன் ராசு(27), இவர்களது தந்தை செல்வக்குமார்(50) ஆகியோர் விக்னேஷிடம் மதுக்குடிக்க பணம் கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் விக்னேசை சரிமாரியாக தாக்கினார்களாம். இதில் படுகாயமடைந்த அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, நேற்றுமுன்தினம் விக்னேஷ் மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து கார்த்தி, ராசுவை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள செல்வகுமாரை ேதடி வருகின்றனர்.

Tags : brothers ,Thiruvannamalai ,
× RELATED மதகொண்டப்பள்ளியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி