பெரணமல்லூரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்ற கடைக்காரருக்கு 2 ஆயிரம் அபராதம்

பெரணமல்லூர், ஜூன் 18: பெரணமல்லூர் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரருக்கு ₹2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக அரசால் கடந்த ஜனவரி மாதம் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டது. இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தது முதல் அவ்வப்போது கடைகளில் சோதனைகள் நடத்தப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று பெரணமல்லூர் பேரூராட்சியில் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் துரைராஜ் தலைமையில், கடைவீதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, ஒரு கடையில் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை பார்த்த சுகாதாரத்துறையினர் கடை உரிமையாளருக்கு ₹2 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் அந்தக் கடையில் இருந்த காலாவதி பொருட்களை உடனடியாக அகற்றும் படி உத்தரவிட்டார். சோதனையின் போது மாவட்ட நல கல்வியாளர் எல்லப்பன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அன்பரசன், சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

More