×

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதி கண்மாயில் நேரடியாக கழிவுநீர் கலப்பு

ராஜபாளையம், ஜூன் 14: ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி கண்மாயில் நேரடியாக கழிவுநீர் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.        
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் ஊருக்கு முன்பு பெரிய அளவிலான கண்மாய் உள்ளது. இங்கு அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாறுகால் கழிவுநீர் அனைத்து பகுதியிலிருந்து நேரடியாக கண்மாயில் போய் சேர்வதால் பெரும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.

தற்போது போதிய மழை இல்லாத காரணத்தினால் கண்மாயில் நேரடியாக கழிவு நீர் செல்வதால் கண்மாய் முழுவதும் சேறும், சகதியுமாய் காட்சியளிக்கிறது. மேலும் கண்மாயின் மதகு பகுதி வரை கழிவுநீர் செல்வதால் கண்மாயில் இருந்து வெளியேறும் நீரானது மொத்த கழிவுநீராகவே செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இங்குள்ள கண்மாய் மழைநீர் சேகரிப்புக்காக சிறந்த முறையில் பராமரித்து வைத்துள்ள நிலையில், தற்போது மொத்த குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் இங்கு வந்து சேர்வதால் பெறும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. பல்வேறு தொழிற்சாலைகளில் உள்ள கழிவுநீரும் இங்கு வந்து சேரும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக சுகாதாரத்துறை தலையிட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : area ,Rajapalayam ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...