வத்திராயிருப்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி

வத்திராயிருப்பு, ஜூன் 14: வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்க்கப்பட்டது.
வத்திராயிருப்பு  தாலுகா அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்  கடைபிடிக்கப்பட்டதை அடுத்து சிவகாசி ஆர்.டி.ஓ தினகரன் தலைமையில் உறுதிமொழி  ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார் சரஸ்வதி, தலைமை இடத்து துணை  தஸ்சில்தார் சசிகலா, மண்டல துணை தஸ்சில்தார் சுப்புலட்சுமி, வருவாய்  ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், கிராம  உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED 2 கொத்தனார் விபத்தில் பலி