×

கம்பம் நகராட்சியில் தரைப்பாலங்கள் சேதம் நகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?

கம்பம், ஜூன் 14: கம்பம் நகராட்சியில் 1 ஆண்டுக்கும் மேலாக தரைப்பாலங்கள் சீர் செய்யப்படாமல் உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு வளர்ச்சி திட்டப்பணிகளில் நகராட்சி நிர்வாகம் போதிய அக்கறை செலுத்தாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் தரைப்பாலங்கள் மிக மோசமாக நிலையில் உள்ளன.

குறிப்பாக கம்பம் 18வது வார்டு ஓடைக்கரை தெரு, செக்கடி தெரு உள்ளிட்ட இடங்களில் தரைப்பாலங்கள் சேதமடைந்து கிடக்கின்றன. இதனால் பொதுமக்களே நடந்து செல்லவே முடியாதநிலை தொடர்கதையாகி வருகிறது. சேதமடைந்த தரைப்பாலங்களை கணக்கெடுத்து சீர்செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் கம்பம் நகராட்சி வார்டுகள் நடப்பதற்கு தகுதியற்ற சாலைகளை உருவாக்கிடும் அவலம் ஏற்படும்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கம்பம் நகராட்சியின்

பெரும்பாலான வார்டுகளில் தரைப்பாலங்கள் சேதமடைந்து கிடக்கின்றன. இதனை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.
இதனால் அன்றாடம் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என்று கூறினர்.

Tags : grounds ,municipality ,Pampa ,
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை