×

தேனியில் காற்றின் வேகம் அதிகரிப்பு விளம்பர போர்டுகளால் ஆபத்து

தேனி, ஜூன் 14: தேனியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் விளம்பர போர்டுகள் கீழே விழுந்து பொதுமக்கள் காயம் அடையும் அபாயம் உள்ளது.
தேனி நகர் மாவட்ட தலைநகராகவும், வியாபார நகராகவும் உள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள் தேனிக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். வியாபார நகராக உள்ளதால் தேனியில் கடைகளின் முன்பாக கடை பெயர்பலகை, விளம்பரபலகைகள் உயரமான பகுதிகளில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

தேனியில் தென்மேற்கு பருவகாற்றின் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் பகல் நேரங்களில் சாலையில் வாகனங்கள் செல்லமுடியாத அளவிற்கு தூசுபறப்பதும், வாகனங்கள் சாய்ந்து கீழே விழும் அளவிற்கு காற்றின் வீரியம் உள்ளது. காற்றின் வேகத்தால், கடைகளின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள பெயர்பலகைகள், விளம்பர பலகைகள் கழன்று காற்றில் பறந்து கீழே விழுந்து வருகிறது.

காற்று வீசும்போது உயரமான பகுதியில் இருந்து விளம்பர பலகைகள், தகர மேற்கூரைகள் பெயர்ந்து வந்து கீழே விழுகின்றன. இதனால் சாலைகளில் பயணிக்கும் நடைபாதை பயணிகளும், வாகனஓட்டிகளும் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் விளம்பர பலகைள் குறித்து, மிக உயரமான கட்டிடங்களில் உள்ள தகர கூரைகள் குறித்து ஆய்வு நடத்தி பெயர்பலகைகள் உறுதியாக பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தி விபத்து ஏற்படும் முன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்