×

பரமக்குடியில் காந்தி நினைவு ஸ்தூபி சேதம்

பரமக்குடி, ஜூன் 14:  பரமக்குடியில் உப்பு சத்தியாகிரகத்திற்கு ஆதரவாக பொதுமக்களிடம் போசுவதற்காக காந்தியடிகள் வந்து பேசிய இடத்தில், சத்திய சோதனை ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பராமரிக்காமல் விட்டு விட்ட நகராட்சி நிர்வாகம், பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமக்குடி ஓட்டபாலம் திரவுபதை அம்மன் கோவில் எதிரே காந்தியடிகளின் சத்திய சோதனை ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்தூபி பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. 1927ம் ஆண்டு காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகம் நடத்துவதற்காக நாடு முழுவதும் பொதுமக்களை திரட்டி வந்தார்.

தமிழகம் வந்தபோது சுதந்திர வேட்கையில் தென்மாவட்டங்கள் முழு ஈடுபாடுடன் உள்ளதை அறிந்து கொண்ட காந்தி, பரமக்குடியை தேர்வு செய்து பரமக்குடி ரயில் நிலையத்தில் இறங்கினார். அப்போது காந்தியின் போராட்ட உரையை கேட்பதற்காக தற்போது உள்ள ஓட்டபாலம் திரவுபதை அம்மன் கோவில் முன்பு உரையாற்றினார்.

இந்த இடத்தில் காங்கிரஸ் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு காந்தி நினைவாக ஸ்தூபி நிறுவப்பட்டது. இந்த பகுதியை சேர்ந்தவர்கன் காந்தி ஜெயந்திக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். ஆனால் நகராட்சிக்கு கீழ் உள்ள இந்த இடத்தை முறையாக பராமரிக்காமல் விட்டு விட்டதால் ஸ்தூபி சேதமடைந்து இடிந்து விட்டது. ஆகையால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பூங்கா அமைத்து பராமரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை