அங்கன்வாடியில் பணி கேட்டு கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

மதுரை, ஜூன் 14: மதுரை மாவட்டத்தில் அங்கன்வாடியில் காலியாக இருந்த 1,600 பணியிடங்களுக்கு கடந்த 3ம் தேதி 1,573 பேர் நியமிக்கப்பட்டு,
ஒரே நாளில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த பணிக்கு ஆளுங்கட்சியினரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், தற்போது பணத்தை திரும்ப கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பணம் கொடுத்து ஏமாந்த 10 பெண்கள் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்திறககு வந்து கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம்
(ஊரகவளர்ச்சி), ‘ஏற்கனவே மனு கொடுத்தோம். அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்’ என கூறி முற்றுகையிட்டனர். அதற்கு அவர், ‘மனுக்கள் கலெக்டரிடம் உள்ளது. அவரிடம் சென்று கேளுங்கள்’ என கூறி அனுப்பி வைத்தார். அந்த பெண்கள் கலெக்டர் அறைக்கு சென்றனர். அங்கு கலெக்டர் இல்லாததால் அனைவரும் திரும்பி சென்றனர்.

Tags : Collector ,
× RELATED திருவண்ணாமலையில் தொடர்...