குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 14:  திருநெல்வேலி மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளராக இருந்தவர் அசோக். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஜாதிய பிரச்னை தொடர்பாக பொதுமக்களை அழைத்து சென்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் அசோக்கை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இந்நிலையில் அசோக்கை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஞானசேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் நந்தகோபால் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Tags : Demonstration ,
× RELATED பெண்ணிடம் நகை பறிப்பு