×

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம்

ஊட்டி, ஜூன் 14: மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.  ஆண்டு ேதாறும் ஜூன் மாதம் 12ம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி மஞ்சூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ேகாபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு வெள்ளை பலகைகள், டம்ளர்கள் வழங்கப்பட்டன. கோரகுந்தா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 25 மாணவர்களுக்கு குடைகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இதனை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் லெனின், மாவட்ட கல்வி அலுவலர் நசாருதீன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.


Tags :
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு