×

முதுமலையில் யானை இறந்த விவகாரத்தில் சர்ச்சை விசாரணை நடத்த வனத்துறை திட்டம்

ஊட்டி, ஜூன் 14: முதுமலை வனச்சரகத்திற்குட்பட்ட வனபகுதியில் கடந்த 11ம் தேதி வனத்துறை ஊழியர் ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்டமூலா வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தைதை கண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப கட்ட விசாரணையில் யானை, திடீர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த யானை இறந்த விவகாரத்தில் சுற்றுசூழல் ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.  சுற்றுசூழல் ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், மின்சார கம்பிகளை கடிக்கும் போதோ அல்லது மின்வேலிகளின் மீது மோதும் போதோ அதிர்ச்சியில் இதய துடிப்பு நின்று மாரடைப்பு ஏற்பட்டு யானைகள் இறக்க கூடும்.  நல்ல உடல் நலத்துடன் உள்ள காட்டு யானைகள் திரென இறப்பதற்கு வாய்ப்பில்லை. பிறக்கும் போதே குறைபாடுகளுடன் பிறக்கும் யானைகள் தான் உடல்நல பாதிப்புக்குள்ளாகி இறக்க வாய்ப்புள்ளது. மேலும் யானை இறந்து கிடந்த இடத்திற்கு அருகாமையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அங்கு பேட்டரியுடன் பொறுத்தப்பட்டிருந்த மின்வேலி கம்பி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இறந்த யானையின் வாயில் காயம் உள்ளது. இதனால் மேய்ச்சலுக்கு சென்ற அந்த காட்டு யானை மின்வேலி கம்பியை கடித்ததில் மின்சாரம் பாய்ந்ததில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம், என்றனர். யானை இறந்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மண்டமூலாவில் யானை இறந்த பகுதிக்கு அருகாமையில் பறிமுதல் செய்யப்பட்ட பேட்டரி மற்றும் மின்வேலியில் யானை உயிரிழக்கும் அளவிற்கு மின்சாரம் உற்பத்தியானதா என்பது குறித்து  விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.


Tags : Forest Department ,death ,Mudumalai ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...