வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

கோவை, ஜூன்.14: கோவை க.கா.சாவடி கருப்பண்ணன் தெருவை சேர்ந்தவர் குமார்(59). இவர் அதே பகுதியில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் குமார் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் கடைக்கு சென்று விட்டார். பின்னர் இரவில் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. சம்பவ இடத்துக்கு வந்த க.கா.சாவடி போலீசார் விசாரணை நடத்தினர்.Tags : house ,
× RELATED வீடுகளின் பூட்டை உடைத்து 1 லட்சம், 16 சவரன் திருட்டு