கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

கோவை, ஜூன் 14: கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது.ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி  நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பழனியம்மாள் முதலாமாண்டு மாணவர்கள், அவர்களது பெற்றோர்களை வரவேற்று, துறை தலைவர்களை அறிமுகப்படுத்தினார். மாற்றம் நிறுவனத்தின் அறங்காவலர் சுஜித்குமார் பேசுகையில், ‘‘தன்னம்பிக்கையோடு வாழ்பவர்களே வெற்றி பெற்றவராக உள்ளனர். எனவே, மாணவர்கள் அதனை உணர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்’’ என்றார்.

ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி பேசுகையில், ‘‘பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாணவ, மாணவிகள் அனைவரும் கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் உடன் கல்லூரியை விட்டு செல்ல வேண்டும்’’ என்றார்.கடந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து சென்றவர்களுக்கு வேலைவாய்ப்பு பணி நியமன ஆணை  வழங்கப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவர்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி புஷ்பகலா, மாணவர் பிரவீன் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. முடிவில், வணிகவியல் துறை தலைவர் சாந்தினி நன்றி கூறினார்.

Tags : Reception ceremony ,Kokrishna ,Adiya College ,
× RELATED டால்பின் முனைக்கு செல்ல அனுமதி