ராஜக்காபட்டி மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோபால்பட்டி,ர ஜூன் 14: திண்டுக்கல் சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜக்காபட்டி அருள்மிகு மாரியம்மன் கோயில். பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது இந்த கோயில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று நேற்று கோயில் அருகில் யாகசாலை அமைக்கப்பட்டு இதில் விக்னேஸ்வர பூஜை, உன் புண்ணிய யாக வாசம், துவாரபூஜை, பூரணஹூதி, தீபாராதனை, கிரக பூஜை, லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் சிவாச்சாரியார்கள், கிராம பொதுமக்கள் நன்கொடை சார்பிலும் நடைபெற்றது.

பின்பு பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களால் புதிதாக அமைக்கப்பட்ட கும்பத்திற்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு பின்னர் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு கும்பநீர் தெளிக்கப்பட்டது. இதில் ராஜக்காபட்டி பகுதியை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Tags : Rajakapatti Mariamman Temple ,Great Kumbabhishekam ,
× RELATED வல்லபி மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்