டூவீலர் திருடியவர் கைது

ஒட்டன்சத்திரம், ஜூன் 14: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, இனங்கானூரைச் சேர்ந்தவர் சிங்கராஜ் (45). இவர் புதன்கிழமை ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள இடையகோட்டை மார்க்கம்பட்டி நாடகமேடை அருகே உள்ள வேன் நிறுத்தும் இடத்தில் தனது டூவீலரை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றார்.

தாடிக்கொம்பு அகரத்தைச் சேர்ந்த சரவணக்குமார் (26) என்பவர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றார். இதைப்பார்த்த சிங்கராஜ் கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் டூவீலர் திருடிய சரவணக்குமாரை விரட்டிச் சென்று பிடித்து, இடையகோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து இடையகோட்டை போலீசார், சரவணக்குமாரை கைது செய்தனர்.

Tags : Duweiler ,
× RELATED டூவீலரில் மது விற்றவர் கைது 86 பாட்டில்கள் பறிமுதல்