×

விவசாயிகள் கோரிக்கை திருவாரூர் அருகே 25 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி இருட்டில் தவிக்கும் 40 குடும்பங்கள் மாற்று இடத்தில் பட்டாவுடன் கூடிய பசுமைவீடு கட்டித்தர எதிர்பார்ப்பு

திருவாரூர், ஜூன் 14: திருவாரூர் அருகே விஷ்ணுபுரத்தில் 25 ஆண்டுகளுக்குமேலாக மின்சாரம் உட்பட எவ்வித அடிப்படை வசதியும் இன்றி 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தவித்து வருவதால் மாற்று இடத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா விஷ்ணுபுரம் ஊராட்சிக்குட்பட்ட கரையான்திடல் என்ற இடத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பூந்தோட்டத்தில் இருந்து நாச்சியார்கோயில் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை புறம்போக்கில் வசித்து வந்த நிலையில் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் சாலை விரிவாக்க பணிகளுக்காக இவர்களுக்கு கரையான் திடல் பகுதியில் மாற்று இடம் வழங்கப்பட்டு தற்போது அங்கு வசித்து வருகின்றனர். மேலும் இவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு வழங்கப்பட்ட இடம் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடம் என்பதால் இவர்கள் 25 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மின்சார இணைப்பு கூட பெற முடியாமல் இருந்து வருகின்றனர்.இது மட்டுமின்றி குடிநீர், சாலை வசதி உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் மின்சாரம் இல்லாததால் இந்த குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் கல்வி கற்பதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த லெனின் (40) என்பவர் கூறுகையில், இந்த பகுதியில் வசித்து வரும் அனைவரும் ஏற்கனவே பூந்தோட்டம் சாலையோரத்தில் வசித்து வந்த நிலையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மாற்று இடம் வழங்கப்பட்டு இங்கு வசித்து வருகிறோம். இருப்பினும் இந்த இடம் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடம் என்பதால் எங்களை காலி செய்யும்படி வற்புறுத்தி வருகிறார். நிலத்திற்கு எங்கள் பெயரில் பட்டா இல்லாததால் வீடுகளுக்கு மின்சார இணைப்பு கூட பெற முடியவில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலு என்பவர் இரவு நேரத்தில் வீட்டில் இருந்தபோது மின்சாரம் இல்லாததால் பாம்பு கடித்து இறந்தார். இதனால் கரண்ட் இல்லாமல் இருட்டில் கடும் அச்சத்தில் வசித்து வருகிறோம். இதுகுறித்து பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு மாற்று இடத்தில் இடம் கொடுப்பதுடன் அங்கு பசுமை வீடுகளையும் கட்டி கொடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.நிலத்திற்கு எங்கள் பெயரில் பட்டா இல்லாததால் வீடுகளுக்கு மின்சார இணைப்பு கூட பெற முடியவில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

Tags : Tiruvarur ,
× RELATED வலங்கைமானில் பத்தாம் வகுப்பு...