வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குவிண்டால் பருத்தி ரூ.5,262க்கு ஏலம்

வலங்கைமான், ஜூன் 14: வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் குவிண்டால் அதிகபட்ச விலையாக ரூ.ஐந்தாயிரத்து இருநூற்று அறுபத்தி இரண்டுக்கு ஏலம் போனது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வேளாண் விற்பனை மற்றும் விற்பனைத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இதில் நடப்பபு பருவத்திற்கான பருத்தி மறைமுக முதல் ஏலம் செயலாளர் வித்யா தலைமையில் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் வீராச்சாமி மேற்பார்வையில் நடைபெற்றது.

இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாற்பத்தி இரண்டு விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி அதிக பட்ச விலையாக குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 262க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து 759க்கும், சராசரி விலையாக ரூ.5 ஆயிரத்து 18க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நான்கு வியாபாரிகள் கலந்து கொண்டு 72 குவிண்டால் பருத்தியை ரூ. 3 லட்சத்து 62 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்தனர். வருகின்ற புதன்கிழமை நடைபெற உள்ள அடுத்த பருத்தி மறைமுக ஏலத்தில் பருத்தி விவசாயிகள் பெருமளவில் கலந்து கொண்டு இடைத்தரகர் இன்றி பருத்தியினை அதிக விலைக்கு விற்று பயன்பெற பருத்தி விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் வீராச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

Tags : Auction ,
× RELATED தாழ்வாக தொங்கும் உயர் அழுத்த...