×

புதுக்கோட்டை மாவட்டத்தில் இடியுடன் கனமழை

புதுக்கோட்டை, ஜூன் 14: புதுக்கோட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.புதுக்கோட்டை, அன்னவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இதனையடுத்து நேற்று மதியம் முதல் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.அதனை தொடர்ந்து இடியுடன் கனமழை பெய்தது. இந்த மாழை 30 நிமிடத்திற்கு மேலாக நீடித்தது. இந்த மழையால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. குறிப்பாக புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அரசு பொது வளாகம், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

கழிவு நீர் கால்வாய் நிரம்பியதால் பேருந்து நிலையம் பகுதியில் கழிவுநீர் வெளியேறி ஆறுபோல் மழைநீருடன் கலந்து சென்றது. இந்த திடீர் மழையின் காரணமாக குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கறம்பக்குடி:புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் நேற்று மாலை வானம் மேகமூட்டம் அதிகமாகி காணப்பட்டது. திடீரென்று பலத்த காற்று இடியுடன் பலத்த மழை பெய்தது. கடந்த சில வருடங்களாக மழை இன்றி மக்கள் அவதிப்பட்ட நிலையில் நேற்று மழை கொட்டி தீர்த்ததால், பூமி குளிர்ச்சி அடைந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அனைத்து தரப்பு பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.பொன்னமராவதி: பொன்னமராவதி பகுதியில் மழையின்றி கடும் வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று மாலை பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் காற்றுடன் மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் பெரிதும் கிழ்ச்சியடைந்துள்ளனர், மேலும் வெயின் தாக்கம் குறைந்துள்ளது.

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த திடீர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் குளம் போல் தேங்கியது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அதிக காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. நீண்ட நாட்களாக வெயிலை மட்டும் அனுபவித்த மக்களுக்கு நேற்று பெய்த மழை மகிழ்ச்சியை தந்துள்ளது.கந்தர்வகோட்டை அருகே வளவம்பட்டி பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் குளம் போல் தேங்கியது. அதேபோல் வளவம்பட்டி பகுதியில் வீசிய பலத்த காற்றில் மரங்கள் முறிந்து விழுந்தன. இரவானதால் சேத விவரம் காலையில்தான் தெரிய வரும்.



Tags : district ,Pudukottai ,
× RELATED 1,560 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 7,648 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு