×

அரிமளம் அரசு பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் மரக்கன்று நட்டனர்

திருமயம், ஜூன் 14: அரிமளம் அரசு பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி அப்பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்று. இங்கு பள்ளி வளாகத்தை சுற்றி இருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மரங்கள் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் வேரோடு சாய்ந்தது. இது ஆசியர்கள் மட்டுமல்லாது முன்னாள், மாணவர்கள், பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியது. இதனிடையே பசுமையாக காணப்பட்ட அரசு பள்ளி வளாகம் மரங்களின்றி வெறிச்சோடியது. இந்நிலையில் மீண்டும் பள்ளி வளாகத்தை பசுமையாக்க முன்னாள் மாணவர்கள் முடிவு செய்தனர். இதற்காக அரிமளம் பசுமை மீட்பு குழுவுடன் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் அரசு, வாகை, மகிழம், வாதா, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளை வாங்கி பள்ளி வளாகத்தில் நட முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் குமார், செந்தில், முத்துபழனி, கார்த்திகேயன் உள்ளிடோர் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் முன்னாள் ஆசிரியை பட்டம்மாள், கணேசன் உள்ளிட்டோர் மரம் வளர்ப்பு பற்றி உரையாற்றினர். மேலும் மரக்கன்றுகளை பாதுக்காக்க பள்ளி மாணவர்களை பல குழுவாக பிரித்து மரக்கன்று வளர்ப்பில் சிறப்பாக செயல்படும் குழுவுக்கு பரிசு வழங்கப்படும் என ஊக்கப்படுத்தினர். நிறைவாக பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.


Tags : Alumni ,premises ,State School ,
× RELATED பெண்களை மதிக்க வீடுகளில்...