கோடியக்கரையில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி

மணமேல்குடி, ஜூன் 14: மணமேல்குடி கோடிக்கரை பகுதியில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், வனத்துறை, மீன்வளத்துறை, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு மற்றும் புதுகை மாவட்ட மீனவர்கள் இணைந்து கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் கடற்கரை மற்றும் காட்டின் சுற்றுவட்டார பகுதிகளில் இயற்கை சூழலை தூய்மைப்படுத்தும் மருத்துவ குணமுடைய புன்னை மரக்கன்றுகள் மற்றும் 5,000 புன்னை விதைகள் முறையாக விதை நேர்த்தி செய்யப்பட்டு நடவு செய்யப்பட்டது. அத்துடன் மீனவர்களும், ஊர்க்காவல் படையினர் மற்றும் காவலர்களுக்கு கடல்வளம் மேம்பாடு, பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த பணியில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானிகள் ஆனந்த் பாண்டே, மது, செல்வி, ருக்மணி மற்றும் குழுவினர், வனத்துறை வனச்சரகர் ராஜசேகரன், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சுபா, எஸ்ஐக்கள் ஜவஹர், ரகுபதி, ராஜ்குமார், காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்துகொண்டனர்.


Tags : Shore Cleaning Service ,
× RELATED கறம்பக்குடியில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம்