×

ஆலங்குடி அருகே அரசு பேருந்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை, ஜூன் 14: ஆலங்குடி அருகேயுள்ள வாராப்பூரில் அரசு பஸ் நிறுத்தப்படாததை கண்டித்து பொதுமக்கள் ஆதனக்கோட்டை - ஆலங்குடி சாலையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வாராப்பூரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். புதுக்கோட்டைக்கு செல்லும் இப்பகுதி பொதுமக்கள், அரசு, தனியார் அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலிவேலைக்கு செல்லுபவர்கள் காலை, மாலை பேருந்தை பயன்படுத்துவது வழக்கம். மேலும், பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இலவச பஸ் பாஸ் வைத்துள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டையிலிருந்து வாராப்பூருக்கு மாலை இயக்கப்பட்ட அரசு பஸ்சை கலெக்சன் இல்லையென, அதிகாரிகள் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் தினம்தினம் அவதியடைந்து வந்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று ஆதனக்கோட்டை - ஆலங்குடி சாலையில் வாராப்பூரில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சம்பட்டிவிடுதி போலீசார், மீண்டும் மாலை நேரத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் பஸ் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், ஆதனக்கோட்டை - ஆலங்குடி சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags : bus stops ,Alangudi ,
× RELATED கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு:...