கறம்பக்குடி அருகே கருத்து வேறுபாடு ஆசிரியையின் டூவீலருக்கு தீ வைப்பு: கணவன் கைது

கறம்பக்குடி, ஜூன் 14: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆத்தங்கரைவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (40). கறம்பக்குடியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் கறம்பக்குடி அக்ரகாரம் பகுதியை சேர்ந்த சுகுமாரி(32) என்பவருக்கும் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகிறது. சுகுமாரி புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக இருவரும் தனி தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடின் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் சுகுமாரியின் வீட்டுக்கு வந்த கலியமூர்த்தி வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுகுமாரியின் ஸ்கூட்டியை தீ வைத்து கொழுத்தியுள்ளார். இதில் இரு சக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமாகி விட்டது.இது குறித்து சுகுமாரி கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : school ,Karambukudi ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...