பொதுமக்கள் எதிர்பார்ப்பு காத்தான்குடிகாடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூர், ஜூன் 14: காத்தான்குடிகாடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்த காத்தான்குடிக்காட்டில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 12ம் தேதி முதற்கால யாகபூஜை துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜை, கணபதி ஹோமம் நடந்தது. இதையடுத்து கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.× RELATED தொலைதூரக் கல்வியல் படித்து 40...