×

ராமகிருஷ்ணா மற்றும் பொதிகை பாலிடெக்னிக் கல்லூரியில் முதல், நேரடி இரண்டாமாண்டு வகுப்பு துவக்கம்

பெரம்பலூர், ஜூன் 14: பெரம்பலூர் ராமகிருஷ்ணா மற்றும் பொதிகை பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது.  கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசுகையில், தாய், தந்தையை மதித்து வணங்குதல் வேண்டும். கல்வி கற்க தடையாக இருப்பவை தன்னம்பிக்கை இல்லாதது, சோம்பேறி தனம், அலட்சிய தன்மை, செல்போன், தொலைபேசி பயன்படுத்துதலாகும். இவற்றை தவிர்த்தால் மதிப்பெண் பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் என்றார். கல்வி நிறுவனங்களின் செயளாளர் விவேகானந்தர் உரையாற்றினார்.நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜசேகரன் வரவேற்றார். பொதிகை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மோகன் நன்றி கூறினார். விழாவில் துறை தலைவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் பங்கேற்றனர்.Tags : Podigai Polytechnic College ,Ramakrishna ,
× RELATED விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக்...