×

அரசு பள்ளியில் கடலோர உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சீர்காழி, ஜூன் 14: சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச் சூழல் துறை மற்றும் சீட்ஸ் அறக்கட்டளை இணைந்து நாகப்பட்டினம் மாவட்ட கடலோர உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சீர்காழி வனச்சரக வனவர் துளசிமலை, சீட்ஸ் அறக்கட்டளை இயக்குநர் முத்துசாமி, காந்தி கிராமம் சூழியல் பயிற்றுநர் ஐயப்பன் முன்னிலை வகித்தனர். சீர்காழி வனசரக அலுவலர் கருப்பு கலந்து கொண்டுபேசினார்.அப்போது, கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், கழிவுநீர் கடலில் கலப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பவளப் பாறைகள் மற்றும் கடற்புற்களை காப்பது பற்றியும், கடற்கரை யில் ஆமைகள் விடும் முட்டைகளை காப்பது, அலையாத்தி காடுகளை காப்பது பற்றி கருத்துரைகள் வழங்கினார். முடிவில் கள அலுவலர் அஜித் நன்றி கூறினார்.


Tags : Government School ,
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...