×

குறுவை பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31ம் தேதி கடைசி நாள்

தரங்கம்பாடி, ஜூன் 14: வேளாண் காப்பீடுத் திட்டத்தில் குறுவை பயிர்களுக்கு காப்பீடு செய்ய ஜூலை 31ம் தேதி கடைசி நாள் என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செம்பனார்கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குனர் தாமஸ் கூறியதாவது:வேளாண்மை துறை சார்பில் பயிர்களை காப்பீடு செய்து மழை மற்றும் இயற்கை அழிவிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற பாரத பிரதமரின் வேளாண்மை காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பிரிமியம் செலுத்தி தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்து பலனடைந்து வருகின்றனர். மேலும் நிலையான வருமானம் கிடைத்திட வழிவகை செய்தல், நவீன வேளாண்மைத் தொழிலில் நவீன வேளாண்மை தொழில் நுட்பங்களை கடைபிடிக்க விவசாயிகளை ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட செயல்முறைகள் இத்திட்டத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றன. தற்போது குறுவை சாகுபடிக்கு (காரிப்பருவம்) விவசாயிகள் தங்கள் பயிர்களைக் காப்பீடு செய்ய ஜூலை 31ம் தேதி கடைசி நாளாகும்.விவசாயிகள் ஏக்கருக்கு 620 ரூபாய் பிரிமியம் செலுத்தி தங்கள் பயிர்களைக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். கூட்டுறவு வங்கி, தேசிய மேம்பாட்டு வங்கிகள், பொது தேவை மையங்கள், வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட இடங்களில் ஏதேனும் ஒன்றில் நடப்பு பருவ சிட்டா அடங்கலை கொடுத்து பிரிமியம் தொகை கட்ட வேண்டும். இந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்ய அகில இந்திய காப்பீட்டு கம்பெனி நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது