×

ஆய்வு செய்ய மக்கள் கோரிக்கை அரசு, தனியார் நிறுவனங்களில் பழிவாங்கும் நடவடிக்கை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூன் 14: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைத்ததால் தொழிலாளர் மீது பழிவாங்கல் நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும், தொழிற்சங்க உரிமை, தொழிலாளர் சட்டங்களை கறாராக அமல்படுத்த தமிழக அரசு தலையிடக் கோரியும் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனை பிறப்பித்த ஊழியர்கள் தற்காலிக நீக்க நடவடிக்கையை ரத்து செய்யக் கோரியும் நேற்று மாலை கரூர் ஆர்எம்எஸ் தபால் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிஐடியூ தொழிற்சங்க மாவட்டதலைவர் ஜீவானந்தம், தலைமை வகித்து பேசினார். மாவட்ட செயலாளர் முருகேசன், பல்வேறு சங்க நிர்வாகிகள் கணேசன், மகாவிஷ்ணன், ஜெயராஜ், வெங்கடேசன், சக்திவேல் பேசினர், சிஐடியூ மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags : Companies ,
× RELATED சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா டா..டா..!:...