க.பரமத்தி ஒன்றிய திமுக செயலாளர் இல்ல மணவிழா மணமக்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கரூர், ஜூன் 14: கரூர் அட்லஸ் கலையரங்கில் நடந்த க.பரமத்தி திமுக ஒன்றிய செயலாளர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்தினார்.கரூரில் நேற்று அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, புன்னசத்திரம், விட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் நடந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு, வாக்காளர்களை சந்தித்து நன்றியை தெரிவித்துக் கொண்டதோடு, அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.இதைத் தொடர்ந்து, நேற்று மாலை கரூர் அட்லஸ் கலையரங்கில், க.பரமத்தி ஒன்றிய திமுக செயலாளர் கருணாநிதியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணியளவில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, திமுக தலைவர் ஸ்டாலின், மணமக்கள் ரஞ்சித் செல்லப்பா-சாகித்யா ஆகியோர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார்.

10 நிமிடங்கள் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு கார் மூலம் திருச்சி சென்றார்.இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, சின்னசாமி, சொத்து பாதுகாப்பு குழுச் செயலாளர் கே.சி.பழனிசாமி, திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி, மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், குளித்தலை எம்எல்ஏ ராமர், முன்னாள் எம்எல்ஏக்கள் மாணிக்கம், காமராஜ் உட்பட அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : wedding ,MK Stalin ,DMK ,
× RELATED வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு