×

டீனை கண்டித்து 3 நாட்களாக நடந்த செவிலியர்கள் தொடர் போராட்டம் வாபஸ்

கரூர், ஜூன் 14:  கரூரில் அரசு மருத்துவமனை டீனை கண்டித்து செவிலியர்கள் கடந்த 3 நாட்களாக நடத்திய காத்திருப்பு போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் போராட்டம் நேற்று 3வது நாளாக நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் பொறுப்பற்ற போக்கை கண்டித்து கடும்வாக்குவாதம் நடைபெற்றது.கரூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் 140பேர் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகின்றன். கடந்த 5ம்தேதி கூடுதல் பணிச்சுமை, டீனின் தன்னிச்சையான நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டடம் நடத்தினர்.இதனையடுத்து கரூர் ஆர்டிஓ பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில டீன் ரோஸிவெண்ணிலா, தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க மாநில துணைத்தலைவர் நல்லம்மாள், மாவட்ட தலைவர் கார்த்தி, செயலாளர் செல்வராணி, பொருளாளர் தனலட்சுமி ஆகிய 4பேரை சஸ்பெண்டு செய்து நடவடிக்கைஎடுத்தார். இதனைக்கண்டித்து நேற்றுமுன்தினம் செவிலியர்கள் பணிபுறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடிய விடிய காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

டீன் நேற்றுமுன்தினம் காலை மேலும் ஆத்திரம் அடைந்து செவிலியர்கள் போராட்டம் நடத்துவதால் என்ன தண்டனை கிடைக்கும் என போர்டு வைத்தார் .இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.அதோடு இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மருந்தாளுனர் சங்க தலைவரும், அரசு ஊழியர்சங்க மாநில துணைத்தலைவருமான சுப்பிரமணியை நேற்று சஸ்பெண்டு செய்து டீன் உத்தரவிட்டார். 5பேரை சஸ்பெண்டு செய்ததை தொடர்ந்து போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது.,5பேர் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யவேண்டும் டீனை மாற்ற வேண்டும் என நேற்று 3வதுநாளாக காத்திருப்புபோராட்டத்தில் செவிலியர்கள் ஈடுபட்டனர்.இதனிடையே மாநில நிர்வாகிகள் மருத்துவமனை வளாகத்திற்கு வந்து டீனுடன் பேசினர். பின்னர் மாநில தலைவர் சக்திவேல், பொதுசெயலாளர் வளர்மதி உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேசினர். வளர்மதி, அனைவருக்கும் உடனே வேலைக்கு திரும்புங்கள், சஸ்பெண்டு உத்தரவை திரும்பபெற நாங்கள் முயற்சி செய்கிறோம் என்றார். அதற்கான தேதியை குறிப்பிடும்படி கூறினர். அதற்குஅவர் மறுத்துவிட்டார். டீன் பொறுப்பற்ற நடவடிக்கையை கண்டிப்பதை விட்டுவிட்டு அவரை பாராட்டிபேசினார்.

இதனால் கடும் வாக்குவாதம் ஏறபட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வளர்மதி எல்லோரும்போகலாம் என உடன் வந்த நிர்வாகிகளைஅழைத்துபோய்விட்டார். என்னையே எதிர்த்துபேசுகிறீர்களா, கூப்பிட்டுஅவமானப்படுத்துகிறீர்களா ஆத்திரத்துடன் பேசினார். பின்னர் மாநில நிர்வாகிகள்அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. டீன் தன்னிச்சையாக செயல்படுவதைக்கண்டித்து பேசினர். 3வதுநாளாக போராட்டம் நடைபெற்றும் மருத்துத்துறை நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.இந்த போராட்டத்தில் சஸ்பெண்டு உத்தரவை திரும்ப பெறுவது குறித்தும் பிறகோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறை மூலம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்று நேற்று இரவு போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆர்டிஓ சரவணமூர்த்தி, டிஎஸ்பி கும்மராஜா ஆகியோர் இந்த முடிவினை தெரிவித்தனர்.

Tags : nurses ,Dee ,protests ,
× RELATED எழும்பூர் ஆர்பிஎப் அலுவலகத்தில்...