ஏற்காடு மாண்ட்போர்டு பள்ளி முதல்வர் பதவியேற்பு

சேலம், ஜூன் 14: ஏற்காடு மாண்ட்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் முதல்வராக ஏ.டோமினிக் சேவியோ பதவியேற்றார். முதுகலை வரலாறு மற்றும் கல்வியியல் முடித்துள்ள இவர், கடந்த 25 ஆண்டுகளாக மாண்ட்போர்ட் சபையின் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கடந்த 10 ஆண்டுகள் தலைமையாசிரியராக பணியாற்றி மாணவ, மாணவிகளை, மாநில அளவிலான மதிப்பெண்களை பெற வைத்து சாதனை படைத்துள்ளார்.

× RELATED சட்டப்பேரவை சபாநாயகர் தலைமையில்...