மண்டல மின்வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டம்

சேலம், ஜூன் 14: சேலம் மண்டல மின்வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் ெபாது உறுப்பினர் கூட்டம் சேலத்தில் நடந்தது. மண்டல தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் ஸ்ரீதரன், பொது செயலாளர் செகநாதன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியதை போல, தமிழக அரசும், மின்வாரியமும் 2016ம் ஆண்டு ஜனவரி முதல் அமல்படுத்தி 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும்.

மாதாந்திர மருத்துவப்படி ₹ ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்த பட்ச பென்சன் ₹ 9ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியர் மரணம் அடைந்தால், குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து ஈமசடங்கிற்கு ₹10 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதியை ₹ 1.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். டவுன் அரசு பஸ்களில் கட்டணமில்லா பயணம், புறநகர் பஸ்களில் 50 சதவீதம் கட்டண சலுகை மாநிலம் முழுவதும் அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

× RELATED சேலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு