×

பரிசு பொருட்களுக்கு பதிலாக மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்

நாமக்கல், ஜூன் 14: குடும்பத்தில் நடைபெறும் விழாக்களில், பரிசு பொருட்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை வழங்கும் திட்டம், நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறையின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொல்லிமலையில் அரசு தோட்டக்கலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் செம்மேடு மற்றும் படசோலையில் உற்பத்தி செய்யப்படும் நடவுச்செடிகள் மற்றும் விளைபொருட்கள், உடனுக்குடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார மையத்தில், தோட்டக்கலைத்துறை வளர்ச்சி முகமையின் சில்லரை விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தோட்டக்கலைத்துறை மூலம் விழாக்கள் மற்றும் குடும்ப விஷேசங்களில் பரிசு பொருட்களுக்கு பதிலாக, பலன் தரும் மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பழக்கத்தை பொதுமக்களிடையே ஊக்குவிக்கும் வகையில், முன்பதிவு அடிப்படையில் உற்பத்தி செய்து தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் விற்பனை நிலையம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED சூறைக்காற்றுடன் கனமழை