தேசிய சிந்தனை பேரவை செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு, ஜூன் 14: திருச்செங்கோட்டில், தேசிய சிந்தனை பேரவையின் செயற்குழு கூட்டம், தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார்.  செயலாளர் ராஜா வரவேற்றார். கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

திருச்செங்கோட்டை மையமாக கொண்டு ஜவுளிப்பூங்காவை மத்திய அரசு துவங்க வேண்டும். மேலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கவும், குளிக்கவும் தேவஸ்தானம் சார்பில் தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும்; திருச்செங்கோட்டில் அரசு கலைக்கல்லூரியை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர செயலாளர் ரமேஷ்  நன்றி கூறினார்.

Tags : Executive Meeting ,National Thinking Committee ,
× RELATED திமுக தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம்