×

நாவலடி கருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா

பரமத்திவேலூர், ஜூன் 14: மோகனூர் காளியம்மன், மாரியம்மன், செல்லாண்டியம்மன், நாவலடி கருப்பண்ண சுவாமி மற்றும் விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு ஜூன் 17ம் தேதி நடைபெற்றது. இதையொட்டி,வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் கும்பாபிஷேக முதலாமாண்டு நிறைவு விழா நடக்கிறது. 16ம் தேதி காலை 7 மணிக்கு காளியம்மன் கோயிலில் விழா தொடங்குகிறது.

தொடர்ந்து விநாயகர் வழிபாடு, சங்கல்பம், மகா கணபதி யாகம், பூர்ணாஹூதி, தீபாராதனை, முதல் கால 108 கலச பூஜை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு கோயில் தல வரலாறு குறுந்தகடு வெளியிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து இல்லறம் சிறக்க மதுரையா, சிதம்பரமா, என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.

17ம் தேதி காலை, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைகிறது. காலை 7 மணிக்கு நாவலடி கருப்பண்ண சுவாமி மற்றும் மாரியம்மன் கோயிலில் விநாயகர் வழிபாடு, புண்யாகம், இரண்டாம் கால 108 கலச பூஜை, நாவலடி கருப்பண்ண சுவாமிக்கு 108 கலச அபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் குழு மற்றும் மணியன் குல கண்ணந்த குல குடிப்பாட்டு மக்கள் செய்துள்ளனர்.

Tags : ceremony ,Kavabhishekam First Anniversary ,Nawaladi Kovappan Swamy Temple ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா