×

பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி

ராசிபுரம், ஜூன் 14: பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். பள்ளிகளின் ஆசிரியை அனுஷா வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றினார்.

நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் பேசும்போது, ‘இப்பயிற்சி உங்கள் ஆற்றலை புதுப்பிக்கவும், உங்கள் கற்பிக்கும் திறனை மேம்படுத்தவும் வழிவகுக்கும். ஆசிரியர்களாகிய உங்களின் ஒவ்வொரு செயல்களும் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் மாணவச் செல்வங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்களே ஒரு கல்வி நிறுவனத்தின் அடையாளங்கள். எனவே, வெவ்வேறு பாடங்களைப் போதித்தாலும் நாம் அனைவரும் ஒன்றே என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். பயிற்சி முகாமில் முழு அக்கறையோடு உங்களை ஈடுபடுத்திக் கொண்டு, பள்ளிக்கு வெற்றியினையும், பெருமையினையும் ஈட்டித்தர வேண்டும் என்றார்.

இப்புத்தாக்கப் பயிற்சியில் ஆசிரியக் கலையில் உள்ள நுட்பங்கள், ஆசிரியரின் பொறுப்புகள், மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டிகளாகவும் ஆசிரியர்கள் எவ்வாறு திகழ முடியும், கற்பித்தல் நுட்பங்கள், திறன் வடிவமைத்தல் மற்றும் பாவை கல்விக் குழுமத்தின் மதிப்பீடுகள் போன்றவைகள் பற்றிய பயிற்சிகள் வழங்கப்பட்டது.

முகாமில் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் சதீஸ், துணை முதல்வர் ரோஹித், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், கல்வி நிறுவனங்களின் கல்வி முதன்மையர் செல்வி, ஆசிரியர் திறன் மேம்பாடு துறை முதன்மையர் கஸ்தூரிபாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : teachers ,schools ,Pavai Vidyasram ,
× RELATED புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்