×

போடூர்பள்ளத்தில் 7 யானைகள் மீண்டும் முகாம்

ஓசூர், ஜூன் 14: சானமாவு வனப்பகுதிக்கு விரட்டப்பட்ட 7 யானைகள், மீண்டும் போடூர்பள்ளத்தில் முகாமிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் கடந்த 3 தினங்களுக்கு முன், 7 யானைகள் முகாமிட்டு பல குழுக்களாக பிரிந்து போடூர், சானமாவு, கோபசந்திரம், பீர்ஜேப்பள்ளி பகுதி வரை இரவு நேரத்தில் சுற்றி வந்தன. தகவலறிந்த வனத்துறையினர், இந்த யானைகளை ஒன்றாக இணைத்து சானமாவு வனப்பகுதிக்கு விரட்டினர். இந்நிலையில், நேற்று 7 யானைகளும் அங்கிருந்து மீண்டும் போடூர்பள்ளத்திற்கு வந்து முகாமிட்டுள்ளன.

இதை கண்ட அப்பகுதி விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த வனத்துறையினர், யானைகளை பட்டாசு வெடித்து சானமாவு வனத்திற்கு விரட்ட முயன்றனர். ஆனால், அங்கிருந்து செல்லாமல் 7 யானைகளும் போக்கு காட்டியபடி, போடூர் பள்ளத்திலேயே முகாமிட்டுள்ளன.
 இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘7 யானைகளையும் வனப்பகுதிக்கு விரட்ட, கூடுதல் வனத்துறையினர் வரவழைக்கப்பட உள்ளனர்.

எனவே, கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இரவு நேரத்தில் வீட்டிற்கு முன் மின்விளக்கு எரிய விடவேண்டும். மேலும், வனப்பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். யானைகள் அவ்வப்போது தனியாக சுற்றி வருவதால், கால்நடை மேய்க்கவும், விறகு எடுக்கவும் யாரும் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம்,’ என்றனர்.

Tags : camp ,
× RELATED திருவாரூர் முத்துப்பேட்டை இலவச...