கேஆர்பி அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

போச்சம்பள்ளி, ஜூன் 14:  தினகரன் செய்தி எதிரொலியால், கேஆர்பி அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரிக்கு கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு  பண்ணந்தூர், vஅகரம், அரசம்பட்டி, வாடமங்கலம், செல்லம்பட்டி, நாகரசம்பட்டி, பாரூர், காவப்பட்டி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், 4 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில், விவசாயிகள் சன்ன ரகம், குண்டுரக நெல்லை நாற்று விட்டு நடவுக்காக காத்துள்ளனர். இதனையடுத்து, விவசாயிகள் கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து, பாரூர் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.

இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு, 257 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கேஆர்பி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு, தற்போது பாரூர் பெரிய ஏரிக்கு, கால்வாய் மூலமாக  69 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் 10 நாட்களில் பாரூர் ஏரி நிரம்பும். இதனால், இந்த ஆண்டு நெல் மகசூல் அதிகரிக்கும்,’ என்றனர்.

Related Stories: