×

மாவட்ட மைய நூலகத்தில் குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 14:  கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில், குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் குரூப் 4 (கிராம நிர்வாக அலுவலர், இளநிலை அலுவலர், பில் கலெக்டர், தட்டச்சர் போன்ற பணியிடங்களுக்கு)க்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 15ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

மேலும் இப்போட்டித் தேர்வுகளுக்கு 800 நூல்கள் உள்ளது. இது தவிர தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் மற்றும் பருவ இதழ்கள் வரவழைக்கப்படுகின்றன. மேலும் மைய நூலகத்தில் ஸ்மார்ட் வாசிப்பு மண்டலம் ஏறப்டுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் Magzter என்ற செயலியை தங்களின் செல்போனில் இலவசமாக டவுன்லோடு செய்து ejournal, ebooks ஆகியவைகளை படித்து பயன்பெறலாம்.

மேலும், இங்கு போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சொந்த நூல்களை கொண்டு வந்து மையத்தில் படிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இம்மையத்தில் ஏராளமான மாணவ, மாணகள் குரூப் 4, காவலர் மற்றும் குரூப் 2, தேர்வு ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு, பயன்பெற்றுள்ளனர். மேலும் நன்கு பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களை கொண்டு புரஜெக்டர் மூலம் பயிற்சி அளிக்கப்படுவதால் இந்த நல்வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : District Center Library ,
× RELATED 2 அமைச்சர்கள் வழங்கினர் மாவட்ட மைய நூலகத்தில் 22ம்தேதி யோகா பயிற்சி