முதலமைச்சர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 14:  கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில், கடந்த 2015ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” வழங்கப்பட்டு வருகிறது. இதில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருதானது ₹50 ஆயிரம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை  உள்ளடக்கியது.

அதன்படி, இவ்விருது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2019ம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே வருகிற ஜூலை 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,
× RELATED மதுரை பொறியாளருக்கு முதல்வர் வாழ்த்து