×

ஓசூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ

ஒசூர், ஜூன் 14: ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற சத்யா எம்எல்ஏ,  தொகுதிக்குட்பட்ட மத்திகிரி, குருபட்டி, காடிபளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது வீடுகள்தோறும் சென்று, பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் பேருர் செயலாளர் ரவிகுமார், மனோகரன், முத்து, மாணவரணி ராஜா, நகர இளைஞரணி சுமன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் வெங்கடேஷ், நகர பொறுப்பாளர் சென்னீரப்பா, மத்திகிரி வேலு, இலக்கிய அணி துணை அமைப்பாளர் ரவி, பொறியாளர் துணை அமைப்பாளர் ரெட் சுரேஷ், நகர மாணவரணி அமைப்பாளர் ரத்தன்சிங், நகர துணை அமைப்பாளர் நவின், சரவணன், கார்த்திக், ராஜா, நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஓசூர் நகர திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான சத்யா வெளியிட்டுள்ள அறிக்கை:

ஓசூர் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. இதில் ஒரு சில வார்டுகளில் பல நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. தற்போது பள்ளிகள், கல்லூரிகள் திறந்துள்ளதால் காலை, மாலை நேரங்களில் தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேபோல், நகராட்சி பகுதி முழுவதும் புதியதாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக தோண்டிய பள்ளங்களை சரிசெய்யாமல் விட்டுள்ளனர். ஓசூர் காந்தி ரோடு, நேதாஜி, ஏரித்தெரு உள்ளிட்ட குறுகலான சாலையில் பள்ளங்கள் தோண்டியதால், பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், குப்பைகளை சரியாக அகற்றுவதில்லை. மின்விளக்குகளும் எரிவதில்லை.

நகராட்சியில், தினக்கூலிக்கு ஆட்களை அமைத்து, ஊழல் செய்து வருகின்றனர். நகரெங்கும் கழிவு நீர் கால்வாய் சீரமைக்காமல், கழிவு நீர் தேங்கி கொசுகள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. ஓசூர் ஊழல் நகராட்சியாக மாறி வருகிறது. எனவே, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் சரிசெய்து தராவிட்டால், மக்களை திரட்டி நகராட்சியை கண்டித்து, மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : DMK MLA ,voters ,Hosur ,
× RELATED ஓசூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ